புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது - இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு
2 புரட்டாசி 2026 புதன் 14:13 | பார்வைகள் : 147
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk இன் பெறுபேறுகள் பக்கத்தில் பார்வையிட முடியும்.
மாணவர்கள் தங்களின் பரீட்சைச் சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
அத்துடன், நாடுமுழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் சுமார் 294,089 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



