ரஷ்ய வான்வெளி மூடல்! அனைவருக்கும் எச்சரிக்கை - ஜெலென்ஸ்கி

ரஷ்ய வான்வெளி மூடல்! அனைவருக்கும் எச்சரிக்கை - ஜெலென்ஸ்கி

2 புரட்டாசி 2026 புதன் 13:42 | பார்வைகள் : 161


ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வான்வெளியை உக்ரேனிய ட்ரோன்கள் மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தங்களது ட்ரோன் விமானங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அபாயகரமானதாக மாற்றியுள்ளது என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.

அவர் தனது இரவு நேர காணொளி உரையில், "இன்று, ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும், ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும், முக்கிய ரஷ்ய விமான நிலையங்களை இன்னும் பயன்படுத்தும் அனைவருக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்; ரஷ்ய வானம் முற்றிலும் அபாயகரமானதாக மாறி வருகிறது" என்றார்.

மேலும் அவர், "உக்ரைன் பொது விமானப் போக்குவரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ரஷ்யாவின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் இருக்கும்; மேலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் கூறினார்.  

 

தொடர்ந்து படிக்க