ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிரடி அரைசதம் விளாசிய 20 வயது வீரர்
2 புரட்டாசி 2026 புதன் 07:37 | பார்வைகள் : 108
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் விளாசினார்.
முத்தரப்பு டி20 தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் அரைசதம் விளாசினார்.
Windhoek மைதானத்தில் நடந்து வரும் டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக துடுப்பாடி வருகிறது.
ஹெர்மன் 28 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 20 வயதான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 27 பந்துகளில் தனது இரண்டாவது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.



