இரண்டாவது இன்னிங்ஸிலும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி - அரையிறுதியில் அபார வெற்றி
1 புரட்டாசி 2026 செவ்வாய் 14:59 | பார்வைகள் : 117
துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி வெற்றி பெற்றது.
பெங்களுரூவில் நடந்த துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய மண்டல அணியை வீழ்த்தியது.
கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்தது.
159 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.
அவர் 43பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அபிமன்யூ ஈஸ்வரன் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் சிங் 12 ஓட்டங்களிலும், குமார் குஷாக்ரா 22 ஓட்டங்களிலும் வெளியேற அனுகுல் ராய் டக்அவுட் ஆனார்.
எனினும், இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 (41) ஓட்டங்கள் எடுக்க, கிழக்கு மண்டல அணி 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.



