இலங்கையில் மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவர்

இலங்கையில் மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவர்

30 ஆவணி 2026 ஞாயிறு 16:51 | பார்வைகள் : 404


மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிவிட்டு கணவன் பொலிஸில் சரணடைந்த சம்பவமொன்று நுவரெலியா பகுதியில் பதிவாகியுள்ளது.

குடும்ப முரண்பாடு காரணமாக மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி காயப்படுத்திவிட்டு, தானே பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காயமடைந்த நிலையில் இருந்த மனைவி, பிரதேச மக்களால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலந்த, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தொடர்ந்து படிக்க