இங்கிலாந்து 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்! பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

இங்கிலாந்து 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்! பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

30 ஆவணி 2026 ஞாயிறு 15:40 | பார்வைகள் : 134


லார்ட்'ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து 389 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில், இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களும், பாகிஸ்தான் 110 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஜோ ரூட் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எமிலியோ கே 31 ஓட்டங்கள் எடுத்து மொஹம்மது அப்பாஸ் பந்துவீச்சில் lbw ஆனார். அணியின் ஸ்கோர் 128 ஆக உயர்ந்தபோது ஹாரி புரூக் (34) ஆட்டமிழக்க, டேன் லாரன்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜேமி ஸ்மித் மற்றும் கஸ் அட்கின்ஸன் தலா 7 ஓட்டங்களில் வெளியேறினர். டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி விக்கெட்டான ஜோஷ் டங்கினை (12) பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் ரன்அவுட் செய்ய, இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அபாரமாக பந்துவீசிய மொஹம்மது அப்பாஸ் 5 விக்கெட்டுகளும், குர்ரம் ஷஷாத் மற்றும் மொஹம்மது அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

389 ஓட்டங்கள் என்ற இலக்கினை நோக்கி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.  

 

 

தொடர்ந்து படிக்க