Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நாட்டுக்கு ஹமாஸ் விடுத்துள்ள நிபந்தனை

இஸ்ரேல் நாட்டுக்கு ஹமாஸ் விடுத்துள்ள நிபந்தனை

29 ஐப்பசி 2023 ஞாயிறு 10:06 | பார்வைகள் : 9859


இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7 ஆம் திகதி திடீர் தாக்குதல் நடத்தினர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 22-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கிடையே, போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.

இந்நிலையில், தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்