Paristamil Navigation Paristamil advert login

கஜகஸ்தானில் கோர விபத்து - 32 பேர் பலி

கஜகஸ்தானில் கோர விபத்து - 32 பேர் பலி

29 ஐப்பசி 2023 ஞாயிறு 08:41 | பார்வைகள் : 8021


கஜகஸ்தானில் ArcelorMittal நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த சுரங்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த 252 பேரில், 208 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

அதில் 32 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பல சுரங்கத் தொழிலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணையை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்