Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இணைந்த தனுஷ், பிரபுதேவா கூட்டணி

மீண்டும் இணைந்த தனுஷ், பிரபுதேவா கூட்டணி

31 ஐப்பசி 2023 செவ்வாய் 09:45 | பார்வைகள் : 5103


நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். 

இதன் முழு படப்பிடிப்பும் சென்னை ஈ.சி.ஆர்-ல் வட சென்னையை பிரமாண்டமான அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்திற்காக புதிய பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இந்த பாடல் காட்சியை பிரபுதேவா இயக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ரவுடி பேபி உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்