மாணவர் விசா தொடர்பில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் கனடா!

31 ஐப்பசி 2023 செவ்வாய் 08:04 | பார்வைகள் : 8452
கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களிடம் ஏஜென்சிகள் போலி ஆவணங்களை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து இந்தியாவை சேர்ந்த 700 மாணவர்களை வெளியேறுமாறு கனடா தெரிவித்துள்ளது
இந்நிலையில் மோசடியில் பாதிகப்பட்ட மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் மாணவர் விசாவில் வருபவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும். இந்த புதிய கொள்கை வருகிற 01.12.2023 முதல் அமுல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில்,
கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம் என்றார்.
இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதுடன், உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் என்றும் கனடா தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025