Ballon d’or விருது பெற்ற லியோனல் மெஸ்ஸி!!
31 ஐப்பசி 2023 செவ்வாய் 02:30 | பார்வைகள் : 10927
2023 ஆம் ஆண்டுக்கான ‘தங்கப்பந்து’ Ballon d’or விருது வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பரிசில் இடம்பெற்றது. உதைபந்தாட்டத்துக்கு வழங்கப்படும் உயரிய Ballon d’or விருதினை எட்டாவது முறையாக லியோனல் மெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.

2009, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் இந்த விருதினை லியோனல் மெஸ்ஸி பெற்றிருந்தார். அதையடுத்து நேற்றைய தினம் வழங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான விருதினை எட்டாவது முறையாக பெற்றுக்கொண்டார்.
சென்றவருடம் கட்டாரில் இடம்பெற்ற உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டியில் அவரது ஆர்ஜண்டினா அணி ‘சாம்பியன்’ ஆனது. அதில் சிறந்த வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
36 வயதுடைய லியோனல் மெஸ்ஸி, உதைபந்தாட்டத்தில் ‘GOAT' என அழைக்கப்படுவது அறிந்ததே. 'greatest of all time’ எனும் ஆங்கிலப்பதத்தின் சுருக்கமே அது. ‘எல்லாக்காலத்திலும் சிறந்தவர்’ என அது அர்த்தமாகிறது.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான Ballon d’or விருது பெறும் சந்தர்ப்பம் பிரெஞ்சு வீரர் Kylian Mbappé (வயது 24) மற்றும் Erling Haaland (வயது 23) ஆகியோருக்கும் இந்தது. அதைத் தொடர்ந்தே லியோனல் மெஸ்ஸி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan