பரிஸ் : பதினெட்டாம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு!!

30 ஐப்பசி 2023 திங்கள் 17:31 | பார்வைகள் : 15427
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கத்தி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
ஒக்டோபர் 29, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 52 வயதுடைய ஆண் மற்றும் 37 வயதுடைய அவரது முன்னாள் மனைவி ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இரத்தம் உறைந்த கத்தி ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விரிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மூன்றாவது நபர் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட 52 வயதுடைய ஆண் முன்னதாக 2021 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்து, விடுவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025