கமலின் 234 வது படம் : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்
30 ஐப்பசி 2023 திங்கள் 13:27 | பார்வைகள் : 7967
இந்தியன்- 2 படத்தை அடுத்து பிரபாசுடன் கல்கி படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதையடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 233 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முடித்ததும் மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கப் போகிறார். சமீபத்தில் இந்த 234 வது படத்தின் பூஜை புகைப்படம் மற்றும் டெக்னீசியன் குறித்த தகவல்கள் வெளியாகின. அதோடு நவம்பர் ஏழாம் தேதியான கமலின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல் 234 வது படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்த படத்தின் அறிமுக டீசர் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், மணிரத்னம் - கமல் கூட்டணியில் இணைவது பெருமையாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கமல் பிறந்தநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒருநாளைக்கு முன்னதாக நவம்பர் ஆறாம் தேதியே டீசர் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட் நவம்பர் மூன்றாம் தேதி வெளியாகியுள்ளது. அந்த அப்டேட்டில் கமல்ஹாசனின் பர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரமோ வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு பக்கம் இந்தியன் -2 அப்டேட் , இன்னொரு பக்கம் கமல் 234வது படத்தின் அப்டேட் என செய்திகள் வெளியாகி இருப்பது கமல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan