டெங்கு நுளம்பு பரவல் தீவிரம்!!
30 ஐப்பசி 2023 திங்கள் 13:27 | பார்வைகள் : 11885
பிரான்சில் டெங்கு நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளதாக பொது சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த மே 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை பிரான்சில் 36 பேருக்கு டெங்கு காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவருமே அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள்ளும் டெங்கு காய்ச்சல் நோயாளி ஒருவர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் டெங்கு நுளம்பை அழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. பல நகரங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

























Bons Plans
Annuaire
Scan