உலகக் கிண்ண தரவரிசையில் தொடர்ந்து இந்தியா முதலிடம்
.jpg)
30 ஐப்பசி 2023 திங்கள் 09:46 | பார்வைகள் : 8011
தற்போது இந்தியாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் ஒரு நாள் உலகக்கிண்ண போட்டியில் இந்தியா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதாவது இதுவரை இடம்பெற்ற அனைத்து (06) போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்றுள்ளது.
தென் ஆபிரிக்கா அணியும் கலந்து கொண்ட 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணியும் கலந்து கொண்ட 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்தியா இதுவரை நடந்த எந்த போட்டியிலும் தோல்வியை தழுவிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை இங்கிலாந்து நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025