பாதசாரிகள் மீது பாய்ந்த மகிழுந்து! - நால்வர் பலி!!
30 ஐப்பசி 2023 திங்கள் 08:15 | பார்வைகள் : 13412
பாதசாரிகள் மீது மகிழுந்து மோதியதில் நால்வர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் Sarcelles (Val-d'Oise) நகரில் வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியை குறுக்கறுத்துச் செல்ல முற்பட்டவர்கள் மீதே மகிழுந்து மோதியதாகவும், இதில் 31 வயதில் இருந்து 66 வயது வரையுள்ள இரு பெண்கள், இரு ஆண்கள் என நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் கொண்ட சாரதி கைது செய்யப்பட்டார். அவர் மது பாவனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்து வரும் காவல்துறையினர் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் பாதசாரிகள் கடவை இல்லாது பிறொதொரு இடத்திலேயே வீதியை கடக்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan