Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பணவீக்கம் பாதாளத்தில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.

பிரான்சில் பணவீக்கம் பாதாளத்தில் உள்ளவர்களையும் பாதித்துள்ளது.

30 ஐப்பசி 2023 திங்கள் 07:52 | பார்வைகள் : 10834


நவம்பர் முதலாம் திகதி சகல புனிதர்களின் நாளாகவும், இரண்டாம் திகதி சகல இறந்த ஆன்மாக்களின் நாளாகவும் கடைப்பிடிக்கப்படு, அன்றையதினம் நெருங்கிவரும் போது; தங்களின் இறந்த உறவுகளின் கல்லறைகளை சுத்தம் செய்வது, புனரமைப்பது, மலர் கொத்துகள் வைத்து அலங்கரிப்பது. பிரான்ஸ் நாட்டவரின் பாரம்பரியங்களில் ஒன்று.

இதன் வேலைகளைச் செய்வதற்கு என்றே தனியான வேலையாட்களும் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக எற்பட்டுள்ள பணவீக்கத்தால் பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த பாரம்பரியத்தை மெல்லமெல்ல கைவிட்டு வருவதாகவும், சிலர் வேலையாட்களை மணிக்கு அமர்த்தாமல் தாங்களே திருத்த வேலைகளை செய்வதுடன், மலர் கொத்துகள்களையும் தாமே தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆண்டுக்கு ஒருமுறை மேற்குறிப்பிட்ட வேலைகளைச் செய்யும் வேலையாட்களும், மலர் கொத்துக்களை தயாரிக்கும் விற்பனையாளர்களும், பூந்தோட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இறந்த ஆன்மாக்களின் நாளான நவம்பர் இரண்டாம் திகதியை பிரான்ஸ் நாட்டவர்கள் (fête des morts) "இறந்தோர் திருநாள்" என கொண்டாடுவது நீண்ட நெடிய பாரம்பரியம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்