EuroDreams : அதிஷ்டலாபச் சீட்டு! - நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை!

30 ஐப்பசி 2023 திங்கள் 06:26 | பார்வைகள் : 12281
ஐரோப்பாவில் ‘ஈரோ ட்றீம்ஸ்’ (EuroDreams) எனும் பெயரில் புதிய அதிஷ்டலாபச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான Euro Million அதிஷ்டலாபச் சீட்டு ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகளின் பின்னர் அதே நிறுவனத்தினால் இந்த புதிய சீட்டிழுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிஷ்டலாபச் சீட்டில் வெற்றி பெற்றவர்கள், மாதம் 20,000 யூரோக்கள் வீதம் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கு பணம் பெற முடியும் என ஆச்சரியமான அறிவித்தலோடு களம் இறங்கியுள்ளது. போட்டியில் வெற்றி பெற செய்யவேண்டியது 40 இலக்கங்கள் கொண்ட தொகுதியில் அதிஷ்டமான 6 இலக்கங்கள் சரியாக பொருந்த வேண்டும். அத்துடன் ‘கனவு இலக்கம்’ என அழைக்கப்படும் ஐந்து இலக்கங்களில் ஒன்று சரியாக பொருந்த வேண்டும்.
அப்படி அமையப்பெற்றால் நீங்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவீர்கள். உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20,000 யூரோக்கள் வழங்கப்படும். இவ்வாறாக முப்பது வருடங்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். (மொத்த பரிசுத்தொகை 7.2 மில்லியன் யூரோக்களாகும்)
முதல் ஆறு இலக்கமும் பொருந்தி, கனவு இலக்கம் பொருந்தவில்லை எனில், மாதம் 2,000 யூரோக்கள் வீதம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு பணம் வழங்கப்படும்.
நவம்பர் மாதம் முதல் இந்த அதிஷ்டலாபச்சீட்டுக்கள் விற்பனைக்கு வருகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025