Val-d'Oise : மூன்று பிள்ளைகளை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்த ஜொந்தாம் வீரர்!

30 ஐப்பசி 2023 திங்கள் 06:11 | பார்வைகள் : 7824
ஜொந்தாம் வீரர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் Val-d'Oise நகரில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்றது.
Vémars நகரில் வசிக்கும் ஜொந்தாம்வீரர் ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். 2013, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பிறந்த மூன்று பெண் பிள்ளைகளை அவரது சேவைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது அவரது மனைவி வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் வீட்டுக்கு வருகை தந்து பார்த்தபோது நால்வரது சடலங்களும் வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னரே காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025