ஹமாஸ் அமைப்பினரிடம் பிடிபட்டுள்ள சிறுவர்கள்! Champ-de-Mars இல் நூதன ஆர்ப்பாட்டம்!
27 ஐப்பசி 2023 வெள்ளி 08:11 | பார்வைகள் : 12178
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க கோரி Champ-de-Mars பகுதியில் நூதன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குழந்தைகளை வைத்து இழுத்துச் செல்லும் தள்ளு வண்டிகளை (POUSSETTE) Champ-de-Mars இன் புல்வெளி பகுதியில் வைத்து இந்த நூதன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குழந்தைகள் கடத்தப்பட்டதால் அவர்களின் தள்ளு வண்டிகள் மட்டுமே எங்களிடம் மீதமிருப்பதாகவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 30 வரையான இழு பெட்டிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
"poussette vide" என தெரிவிக்கப்படும் இந்த அடையாள ஆர்ப்பாட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan