இலங்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
26 ஐப்பசி 2023 வியாழன் 12:55 | பார்வைகள் : 8268
இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதம் 77 ஆயிரத்து 763 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இந்த மாதத்தில் 20,369 இந்திய பிரஜைகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் இருந்து 7 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6 ஆயிரத்து 287 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4 ஆயிரத்து 923 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan