இலங்கை அடையாள அட்டைக்கான கட்டணத்தில் திருத்தம்
26 ஐப்பசி 2023 வியாழன் 06:04 | பார்வைகள் : 8818
தேசிய அடையாள அட்டையினை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய அடையாள அட்டையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் நிகழ்நிலை முறைமை ஊடாக சமர்ப்பிக்கும் போது 25 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஆவணங்களை பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்படும்போது 500 ரூபா அரவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கு, முன்னதாக 1000 ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 15,000 ரூபாவாக இருக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணம் 2,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan