Hauts-de-Seine : காவல்துறையினர் போன்று வேடமணிந்து நூதன கொள்ளை!
28 ஐப்பசி 2023 சனி 17:45 | பார்வைகள் : 11742
காவல்துறையினர் போன்று வேடமணிந்து வீடொன்றில் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. Rueil-Malmaison (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள வீடொன்றுக்குள் வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணி அளவில் உள்நுழைந்த நால்வர், கைகளில் காவல்துறையினரின் இலட்சினை பொருந்திய சீருடை அணிந்து காவல்துறையினர் போன்று காட்சியளித்துள்ளனர். அப்பகுதி வீடுகளில் கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாகவும், அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் வீட்டின் உரிமையாளர் அவர்களை வீட்டின் உள்ளே சோதனைக்காக அனுமதித்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்த 100 கிராம் தங்க பிஸ்கட், நகைகள், தங்க காசுகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்
அதன்பின்னரே குறித்த வீட்டின் உரிமையாளர் வந்திருந்தது கொள்ளையர்கள் என உணர்ந்து, காவல்துறையினரை அழைத்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 45,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நூதன கொள்ளை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan