சத்தமில்லாமல் நடந்து முடிந்த அர்ஜுன் மகள் திருமண நிச்சயதார்த்தம்!

28 ஐப்பசி 2023 சனி 14:13 | பார்வைகள் : 7946
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழியிலும் நடித்துள்ளார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.
இவரும் நடிகர், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர்.உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார்.
அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார். அந்த சமயத்தில் அர்ஜுனின் மகளுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் மத்தியில் இருந்து பச்சைக்கொடி கிடைத்துள்ளது. இதுப்பற்றிய தகவல்கள் கடந்த சில மாதங்களாக சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இருவீட்டு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025