வெளிநாட்டில் வேலைவாய்ப்பு - தொடர்ந்து ஏமாற்றப்படும் இலங்கையர்கள்
28 ஐப்பசி 2023 சனி 14:11 | பார்வைகள் : 7024
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 16.3 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்துள்ளதாக குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தது.
அதனடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்துள்ளனர்.
35 மற்றும் 57 வயதுடைய இவர்கள் இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan