Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் மரணமடைந்த இலங்கை பெண் - நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட சடலம்

இஸ்ரேலில் மரணமடைந்த இலங்கை பெண் - நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட சடலம்

28 ஐப்பசி 2023 சனி 13:04 | பார்வைகள் : 8073


இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சடலத்தை ஏற்றி வந்த விமானம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த அனுலா ரத்நாயக்க உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்