இளம் கர்ப்பிணிப் பெண்ணின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மீட்பு

28 ஐப்பசி 2023 சனி 12:17 | பார்வைகள் : 7541
அமெரிக்காவில், மொடலாகிய அழகிய இளம்பெண் ஒருவர் மாயமாகியுள்ளார்.
இந்நிலையில், அவரது உடல் குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்டதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்ற மாதம், Maleesa Marie Mooney (31) என்னும் இளம்பெண்ணைக் குறித்து தகவல் எதுவும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
பொலிசார் அவரை, லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அவரது வீட்டுக்குள்ளேயே, குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடித்தனர்.
உடற்கூறு ஆய்வில் Maleesaவின் மரணம் குறித்து பதைபதைக்கவைக்கும் உண்மைகள் தெரியவந்தன.
Maleesa, இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மணிக்கட்டுகளும் கணுக்கால்களும் கட்டப்பட்டு, அவர் குளிர்சாதனப் பெட்டி ஒன்றிற்குள் திணித்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அத்துடன், அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். Maleesaவை கொடூரமாக தாக்கி கொலை செய்தது யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தாயாகும் ஆசையிலிருந்த தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் Maleesaவின் பெற்றோரும், அவரது காதலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1