'Reel Partner' தேவை: மாப்பிள்ளை தேடும் பெண்ணின் வித்தியாசமான திருமண விளம்பரம்
.jpg)
28 ஐப்பசி 2023 சனி 12:01 | பார்வைகள் : 4664
பெண் ஒருவர் தனது வருங்கால துணை குறித்து பதிவிட்ட மேட்ரிமோனியல் விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் சில விளம்பரங்கள் மற்றும் திருமணம் தொடர்பான பேனர்கள், வித்தியாசமான திருமண பரிசுகள் உள்ளிட்டவை ட்ரெண்ட் செய்து வருவார்கள்.
அந்தவகையில், திருமணம் தொடர்பான சில மேட்ரிமோனியல் தளங்கள் சமூகவலைதளைங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ரியா என்ற பெண் ஒருவர் பதிவிட்ட திருமண விளம்பரம் வைரலாகி வருகிறது.
அந்த விளம்பரத்தில் ரியா, தனது வருங்கால துணை தொடர்பாக சில தேவைகளை பட்டியலிட்டுள்ளார். அதில் அவர், தனக்கு துணையாக வருபவர் கேமராவுக்கு வெட்கப்படாதவராக இருக்க வேண்டும். என்னுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்குவதற்கு ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும், என்னுடைய ரீல்ஸ் மற்றும் vlog -யை எடிட் செய்ய வேண்டும். குறிப்பாக பிரிமியர் ப்ரோ (Premiere Pro) சாஃப்ட்வேர் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் உள்ள பயனர்களை ஈர்க்கும் விதத்தில் இருந்தது. இதை பார்த்த சிலர் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1