வானிலை : ஒன்பது மாவட்டங்களுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!!

28 ஐப்பசி 2023 சனி 07:10 | பார்வைகள் : 10396
மழை வெள்ளம், புயல் காரணமாக இன்று சனிக்கிழமை ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Nord, Finistère, Morbihan, Loire-Atlantique, Vendée, Charente-Maritime, Pyrénées-Atlantiques, Landes, Gironde ஆகிய ஒன்பது மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மணிக்கு 90 தொடக்கம் 100 கி. மீ வேகம் வரை புயல் வீசும் எனவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் எனவும், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார தடை ஏற்படும் அபாயமும், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025