பரிஸ் : குழந்தையைக் கடித்துக்குதறிய வளர்ப்பு நாய்! - ஒருவர் கைது!!

27 ஐப்பசி 2023 வெள்ளி 10:44 | பார்வைகள் : 10421
ஒன்றரை வயது குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக்குதறியுள்ளது. பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணி அளவில் இச்சம்பவம் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue Nationale வீதியில் இடம்பெற்றுள்ளது. வளர்ப்பு நாய் ஒன்றை அழைத்துக்கொண்டு வீதியில் நடை பயிற்சியில் ஒருவர் ஈடுபட்டிருந்த போது, திடீரென நாய் கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
வீதியில் நடந்து சென்ற ஒன்றரை வயது குழந்தை ஒன்றை நாய் கடித்துள்ளது. குழந்தையின் காலில் பலத்த காயமேற்பட்டது. குழந்தை மீட்கப்பட்டு 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Trousseau மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய வளர்ப்பு நாய் பிடிக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் உடனடியாக கைது செய்யப்பட்டு, பின்னர் மாலை விடுவிக்கப்பட்டார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025