கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!
27 ஐப்பசி 2023 வெள்ளி 10:22 | பார்வைகள் : 7994
இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார் கமல். அடுத்து வினோத் இயக்கும் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். இதை முடித்த பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்கிறார். நாயகன் படத்திற்கு பின் மீண்டும் கமல் - மணிரத்னம் இணைந்துள்ளனர். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அடுத்தாண்டு தான் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக இந்த படத்தின் அறிமுக வீடியோவை வரும் நவ., 7ல் கமல் பிறந்தநாளில் வெளியிட உள்ளனர். தற்போது அதற்கான வேலைகள் துவங்கி உள்ளன.
அதை குறிப்பிடும் வகையில் கமல், மணிரத்னம் ஆகியோரின் போட்டோக்களையும், பின்னணியில் கமல் 234 பட அறிவிப்பு பலகையும் உள்ள போட்டோவை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் உடன், ‛‛இந்திய சினிமாவின் ஒன்றுபட்ட சக்திகள், கொண்டாட்டம் தொடங்கட்டும்...'' என பதிவிட்டுள்ளனர். #HBDUlaganayaganNov7 என்ற ஹேஷ்டாக்கையும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் கமல் பிறந்தநாளில் இந்த பட அறிமுக வீடியோ வெளியாவது உறுதியாகி உள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan