வானில் இருந்து கொட்டிய அமெரிக்க டொலர்கள்!
27 ஐப்பசி 2023 வெள்ளி 09:49 | பார்வைகள் : 5738
செக் குடியரசு நாட்டில் நடிகர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்க டொலர்களை வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் வானில் இருந்து பணத்தை வீசியுள்ளார்.
இவர், ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கீழே மக்களுக்கு வீசியுள்ளார்.
அப்போது, பணம் கொட்டும் இடங்களில் வந்து பொதுமக்கள் பலரும் தான் கொண்டு வந்திருந்த பைகளிலும், கைகளிலும் பணத்தை எடுத்துச் சென்றனர்.
வானில் இருந்து பண மழை பொழியும் வீடியோவை கமில் பார்டோசெக் பகிர்ந்துள்ளார்.
தற்போது, இந்த வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வீடியோவில் பொதுமக்கள் அனைவரும் போட்டி போட்டு பணத்தை எடுக்க முயலுகின்றனர்.
இவரின் இந்த செயலை பார்த்த பலரும் அவரது கொடுக்கும் மனப்பான்மையை பாராட்டினாலும், ஒரு சிலர் பணத்தை வீணடிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan