Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு

24 ஐப்பசி 2023 செவ்வாய் 08:23 | பார்வைகள் : 6400


உலகின் மிக வயதான நாய் என்ற பெருமையைப் பெற்ற ( Rafeiro do Alentejo's Bobi) ரெப்ரியோ டி அல்டன்டிஜோ போபி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபி என்று அழைக்கப்படும் அந் நாய் உயிரிழக்கும் போது அதற்கு 31 வயது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் உடல்நலக்குறைவு காரணமாக போபி உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவர் கரேன் பெக்கர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1992 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பிறந்த போபி, கடந்த பெப்ரவரியில் வயதான நாய் என கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்