Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன் தற்கொலை

இலங்கையில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன் தற்கொலை

24 ஐப்பசி 2023 செவ்வாய் 05:37 | பார்வைகள் : 10941


பூகொடை, மண்டாவளை ஹிலாரியன் பண்ணை பகுதியிலுள்ள வீடொன்றில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதுடன்,  கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக  பூகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் இது தொடர்பில்  முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய  சுமித்ரா விக்கிரமசிங்க மற்றும் அவரது கணவர் தர்மகீர்த்தி விஜேதுங்க (54) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக  நீதிவான் விசாரணையை  இன்று திங்கட்கிழமை (24) மேற்கொண்டதுடன், சடலங்களை  வட்டுப்பிட்டிவல வைத்தியசாலைக்குக்  கொண்டுச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு  உத்தரவிட்டார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்