ஏழு நாடுகளுக்கு இலவச விசா - இலங்கை அனுமதி
 
                    24 ஐப்பசி 2023 செவ்வாய் 02:58 | பார்வைகள் : 9830
முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் அந்த ஏழு நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வர முடியும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் வீசாக்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan