யாழில் 33 வருடங்களின் பின் ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட மாற்றம்

23 ஐப்பசி 2023 திங்கள் 13:51 | பார்வைகள் : 8263
யாழில் 33 வருடங்களின் பின் ஆலயம் ஒன்று புதுப் பொழிவு பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறும்.
மறுநாள் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்று தொடர்ந்து அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும் , அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறி சென்ற நிலையில் , ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெறவுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025