Gennevilliers : திருமண வீட்டில் பட்டாசு தாக்குதல் நடத்திய இருவர் கைது!

23 ஐப்பசி 2023 திங்கள் 12:52 | பார்வைகள் : 11521
திருமண நிகழ்வு ஒன்றின் போது மோட்டார் பட்டாசு தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நண்பகல் இச்சம்பவம் Gennevilliers (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது.
avenue Gabriel-Péri வீதியில் உள்ள மண்டபம் ஒன்றில் (நகரசபைக் கட்டிடத்துக்கு முன்பாக உள்ள) சனிக்கிழமை பிற்பகல் திருமணம் ஒன்று இடம்பெற்றது. திருமணத்தில் கலந்துகொண்ட இரு விருந்தினர்கள் 4 மணி அளவில் திடீரென திருமண தம்பதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
மோட்டார் பட்டாசு வெடித்து திருமணத்தில் குழப்பம் விளைவித்தனர். பாரிய சத்தத்துடன் மோட்டார் பட்டாசு வெடிக்க, திருமணத்தில் பங்கேற்றவர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடியுள்ளனர்.
பின்னர் அங்கு மேலும் பலர் அங்கு குவிந்ததாகவும், திருமணத்தை நிறுத்தும் நோக்கில் செயற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருமணத்தில் தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025