இஸ்ரேல் நாட்டுக்கு ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா!

23 ஐப்பசி 2023 திங்கள் 08:00 | பார்வைகள் : 7405
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் ஒவ்வொரு நாளும் அதிகளவிலான தீவிரத் தன்மையுடன் நடைபெற்று வருகிறது.
காசா மீது தரைவழி தாக்குதலை தொடர இஸ்ரேல் தயாராக உள்ளது.
இந்த சூழலில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த 'தாட்' Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உள்ளது.
இஸ்ரேலில் ஏற்கனவே ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் 'அயன் டோம்' பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.