Ardennesவில் உள்ள Sedan நகரில் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி Loanaவிற்கு 3000 யூரோக்கள்.

23 ஐப்பசி 2023 திங்கள் 07:34 | பார்வைகள் : 12394
கடந்த ஒக்டோபர் 18ம் திகதி Loana என்னும் 10 வயது சிறுமி 57 வயது சந்தேக நபரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, பின்னர் படுகொலை செய்யப்பட்டார். முதலில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் Sedan நகரில் உள்ள சந்தேக நபரின் வீட்டின் நிலக்கீழ் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து சந்தேக நபர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், குறித்த நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sedan (Ardennes) பகுதியில் வாழும் மக்கள் சிறுமிக்கு ஆதரவாக கடந்த வாரம் ஒரு அமைதிப் பேரணியையும் அங்கு நடத்தினர்.
இந்த நிலையில் Loana முன்னர் கல்விகற்ற, அவரின் இரு இளம் சகோதரர்கள் இன்று கல்விகற்கும் Sedan நகரில் உள்ள l'Esplanade, à Sedan சிறுவர் பாடசாலையின் அதிபர் Caroline Dasnoy; Loanaவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் 'Leetchi' இணையத்தளத்தில் நிதி சேகரிப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்பில் இதுவரை 157 பேர் பங்களித்து 3223 யூரோ பணம் சேகரிக்கப்பட்டு உள்ளது.