அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குறைந்தது 22 பேர் மரணம்

26 ஐப்பசி 2023 வியாழன் 04:18 | பார்வைகள் : 9352
அமெரிக்காவின் மெய்ன் (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன்
(Lewiston) நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
சுமார் 60 பேர் காயமுற்றதாக NBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இரண்டு இடங்களில் நேற்றிரவு (25 அக்டோபர்) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
"அனைவரும் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் இருங்கள். விசாரணை நடைபெறுகிறது," என்று மெய்ன் (Maine) மாநிலத்தின் காவல்துறை 'X' தளத்தில் பதிவிட்டிருந்தது.
வட்டாரத் தலைமை அதிகாரியின் அலுவலகம் சந்தேக நபரின் இரு நிழற்படங்களை Facebookஇல் வெளியிட்டது.
சந்தேக நபரை அடையாளம் காண்பதில் துணைபுரியும்படி பொதுமக்களை அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025