'Harcèlement scolaire' பாடசாலை துன்புறுத்தல் முதற்கட்ட தீர்வு. தேசிய கல்வி அமைச்சு.

25 ஐப்பசி 2023 புதன் 06:56 | பார்வைகள் : 11800
சகல புனிதர்கள் விடுமுறையை (Vacances de Toussaint) அடுத்து பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது, அண்மைக்காலமாக பாடசாலைகளில் அதிகரித்துள்ள (Harcèlement scolaire) பாடசாலை துன்புறுத்தல் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய கல்வி அமைச்சு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் CE2 அல்லது CM2 முதல் collège மற்றும் lycée வரையான சகல வகுப்புகளில் கல்வியிலும் மாணவர்களுக்கு விசேட கேள்விக் கொத்து வழங்கப்படு விடைகள் பெறப்படவுள்ளன. குறித்த கேள்விதாளில்; மாணவர்களின் வகுப்புக்களின் தரத்திற்கு ஏற்ப கேள்விகள் அமைந்திருக்கும்.
குறிப்பாக நீங்கள் எந்தெந்த நேரங்களில் பாடசாலை துன்புறுத்தலுக்கு ஆளாகின்றீர்கள்? உதாரணமாக பாடசாலைக்கு செல்லும் முன்?, பாடசாலையில்?, இணையத்தளங்களில்?, அல்லது முற்றத்தில்?, இடைவேளை நேரத்தில்?, பாடசாலை உணவகத்தில்? என பல கேள்விகள் கேட்கப்படவுள்ளது.
அத்தோடு "நீங்கள் துன்புறுத்தலை மறைக்கின்றீர்களா?, அதற்கு பயப்பிடுகின்றீர்களா? உங்களை துன்புறுத்தும் சம்பவங்கள் தனியாகவா?, அல்லது கூட்டாகவா? எப்படி உணர்கின்றீர்கள் என கேள்விகள் பரிமாறப்பட்டு விடைகள் பாடசாலை அதிபரால் பாதுகாக்கப்பட்டு அதற்கான தீர்வை எட்டவுள்ளதாக தேசிய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025