யாழில் வயோதிப பெண்ணின் உயிரை பறித்த விபத்து

25 ஐப்பசி 2023 புதன் 02:46 | பார்வைகள் : 11123
யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் பலியானர்.
நேற்று நீர்வேலி, இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலை எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதியது.
குறித்த வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் ஆலயத்தில் இருந்த மூதாட்டி சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி ஐந்து பிள்ளைகளின் தாயான (72 வயது) என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025