இஸ்ரேல்- காசா போரில் 40 சதவீதமான சிறார்கள் கொல்லப்பட்ட அவலம்

25 ஐப்பசி 2023 புதன் 02:36 | பார்வைகள் : 7813
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த சுற்று வட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், 222 இஸ்ரேலியர்கள் தற்போது பணய கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளதாக, காசாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் பணயக்கைதிகள் சிலரது புகைப்படங்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025