Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கோர விபத்து...!  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 150 கார்கள் 

அமெரிக்காவில் கோர விபத்து...!  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 150 கார்கள் 

25 ஐப்பசி 2023 புதன் 02:18 | பார்வைகள் : 7599


அமெரிக்காவின் லூசியானா நகரில் காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான பனி பொழிவு காணப்படுகின்றது.

இந்த பனிப்பொழிவுடன் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகையும் சாலை முழுக்க கவர்ந்துள்ளது.

அதனால் சாலையில் 10 அடிக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆற்று பாலத்தில் சென்ற 150 க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்த நிலையில், 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் பாலத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்கள் ஏற்றிக் கொண்டு வந்த லொறி உடனடியாக பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்