இலங்கையில் விருந்துபசாரத்தில் உணவருந்திய இளைஞர் மரணம்
24 ஐப்பசி 2023 செவ்வாய் 14:32 | பார்வைகள் : 8474
பண்டாரவளையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் உணவருந்திய இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தேசிய நீர் வழங்கல் சபையின் ஒப்பந்த அடிப்படையில் சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஹசித் ஆரியவன்ச என்ற அகலவத்தை சந்தகிரி கந்த ஓமட்ட வீதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஆவார்.
இவர் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் மற்றுமொரு நபருடன் வசித்து வந்ததாகவும் இருவரும் மாலையில் விருந்துபசாரத்தில் உணவருந்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உடன் வசிக்கும் நபர் நள்ளிரவு ஒரு மணியளவில் எழுந்து பார்க்கும் போது மாடியில் மின் விளக்குகள் எரிவதை கண்டுள்ளார் அதை பற்றி விசாரிக்க சென்றபோது குறித்த நபரின் வாயிலிருந்து திரவ பொருள் ஒன்று கசிந்த நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அவர் அயல் வீட்டாரை தொலைபேசி அழைப்பில் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan