Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஜாம்பவானின்  சாதனையை முறியடித்த கோலி!

இலங்கை ஜாம்பவானின்  சாதனையை முறியடித்த கோலி!

24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 6060


இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி 95 ஓட்டங்கள் விளாசினார். 

ஒருநாள் போட்டிகளில் அவரது ஸ்கோர் 13,437 ஓட்டங்கள் ஆக உயர்ந்துள்ள நிலையில், இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

ஜெயசூரியா 445 போட்டிகளில் 13,430 ஓட்டங்கள் குவித்துள்ள நிலையில், கோலி 286 போட்டிளிலேயே 13,437 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.   

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் - 18,426 (463 போட்டிகள்)
குமார் சங்கக்காரா - 14,234 (404 போட்டிகள்)
ரிக்கி பாண்டிங் - 13,704 (375 போட்டிகள்)
விராட் கோலி - 13, 437 (286 போட்டிகள்)
சனத் ஜெயசூரியா - 13,430 (445 போட்டிகள்) 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்