தளபதி 68 திரைப்படத்தில் இணையும் முக்கிய நடிகர்கள்!
24 ஐப்பசி 2023 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 7693
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்பதும் இது அவரது 12ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவில் விஜய் கலந்து கொண்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், அதே போல் இந்த படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், மற்றும் வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சித்தார்த் மணி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வெங்கட்ராஜ் எடிட்டர் ஆகவும் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மொத்தத்தில் இந்த பூஜை வீடியோவில் ’தளபதி 68’ படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியானதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan