யாழ் விமான நிலையத்திற்கு வருவோர் கடும் நெருக்கடியில்

21 ஐப்பசி 2023 சனி 03:01 | பார்வைகள் : 7393
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ளது.
இருந்த போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியா மற்றும் கொழும்புக்கு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவதுடன் பெருமளவானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
யாழ் விமான நிலையத்தில் பயணிகளை அழைத்து செல்ல மற்றும் வழியனுப்ப காத்திருப்பவர்களுக்கான இடம் மர நிழல் ஒன்றிலேயே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரங்களுக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கல்லாசனங்களிலேயே பயணிகளும், உடன் வந்தவர்களும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கோடை காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் மழைக்காலங்களில் கல்லாசனங்களில் அமர முடியாது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக பயணிகள் குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளை முடித்து விட்டு காத்திருப்பிற்கான போதிய இடம் இன்மையால் அவர்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025