Paristamil Navigation Paristamil advert login

14 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!! (இரண்டாம் இணைப்பு)

14 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!! (இரண்டாம் இணைப்பு)

20 ஐப்பசி 2023 வெள்ளி 12:22 | பார்வைகள் : 12344


சற்று முன்னர் 8 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்ச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் இந்த எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lille, Beauvais, Tarbes, Nantes, Brest, Toulouse, Carcassonne, Lyon-Bron, Pau, Bordeaux-Mérignac, Nice, Biarritz மற்றும் Rennes ஆகிய விமான நிலையங்களுக்கு இன்று காலை இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அவற்றில் Rennes, Tarbes மற்றும் Béziers ஆகிய மூன்று விமான நிலையங்களில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு, விமான நிலையம் சோதனையிடப்பட்டது. 

விமான நிலையம் மற்றும் பாடசாலைகளுக்கான வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இந்த வாரம் முழுவதும் இடம்பெற்று வருகிறது. 20 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்தில் Château de Versailles கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது முறையாக வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்