Paristamil Navigation Paristamil advert login

Saint-Ouen-l'Aumône : இரண்டு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த சிறுமி கைது!!

Saint-Ouen-l'Aumône : இரண்டு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த சிறுமி கைது!!

20 ஐப்பசி 2023 வெள்ளி 10:42 | பார்வைகள் : 8710


இரு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Saint-Ouen-l'Aumône (Val d'Oise) நகரில் இக்கைது சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 16 வயதுடைய சிறுமி ஒருவர் அங்குள்ள Jean Perrin பாடசாலைக்கும்,  பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு பாடசாலைக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

மின்னஞ்சல் மூலம் பிரெஞ்சிலும், அரபு மொழியிலும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதன் பின்னர், குறித்த பாடசாலைகள் வெளியேற்றப்பட்டு, அங்கு காவல்துறையினரால் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1,100 மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்